:::: MENU ::::
  • To create a Happy, Healthy and Humanity

  • Healthy Life

  • Healthy and Wealthy Life

நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன… அவற்றின் பலன்கள் என்னென்ன?
துளசி
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம்.
தூதுவளை
சளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.
ஆடாதொடை
சளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால் அதன் தீவிரம் குறையும்.
ஓமவல்லி
இருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
கற்றாழை
கற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.
வெற்றிலை
குழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக் கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால், விஷம் முறிந்துவிடும்.
நொச்சி
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும் மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும்.
செம்பருத்தி
செம்பருத்திப் பூக்களை ஜூஸ் அல்லது தேநீராக்கிப் பருகினால் ரத்த அழுத்தம் குறையும். செம்பருத்தி இலை, பூக்களை வெறுமனே அரைத்துப் பூசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். செம்பருத்தி ஓர் இயற்கையான தங்கபஸ்பம்.
மருதாணி
மருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக்கொண்டால் உடல் வெப்பம் தணியும். நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மனநோய் வராமல் தடுக்கும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண்ணுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து, வாய் கொப்பளிக்கலாம். தலையணைக்கடியில் மருதாணிப்பூவை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
கரிசலாங்கண்ணி
குழந்தைகளுக்கு வரும் சளித்தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் தீர கரிசாலை இலையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நோய்கள் வராமலிருக்க கீரையைச் சமைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதோ நல்லது.
நிலவேம்பு
நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30 மி.லி வீதம் காலை, மாலை வேளைகளில் மூன்று நாள் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் மூன்று நாள்கள் காலை, மாலை எனக் குடித்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
பிரண்டை
பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைக்கலாம். இதைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்; மூளை நரம்புகள் பலப்படும்; குடல் வாயுவை அகற்றும். குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் பலப்படும்.
திருநீற்றுப் பச்சிலை
நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து, கட்டிகளின் மீது பூசினால் சட்டென கரையும். தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை வெறுமனே முகர்ந்தால் பிரச்னை சரியாகும். இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்.
முடக்கத்தான்
மழைக்காலங்களில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் மூட்டுவலி, முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி விலகும்.
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாள்கள் குடித்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்க கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.
நித்திய கல்யாணி
ஐந்து நித்திய கல்யாணிப் பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். இதன் வேர்ச்சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். கால் ஆணி, பித்த வெடிப்பு மறையவும் இதன் பாலைப் பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தவர்கள் அம்மான் பச்சரிசியின் செடிகளை அரைத்து எலுமிச்சைப் பழ அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பால் சுரக்கும்.
அகத்தி
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை விலகும். அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால், கண்களுக்குக் கீழே காணப்படும் கருவளையம் மறையும்.
கீழாநெல்லி
கீழாநெல்லியை (50 கிராம்) நன்றாகக் கழுவி 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மஞ்சள்காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாள்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.
சீந்தில் கொடி
சீந்திலின் முதிர்ந்த கொடிகளை உலரவைத்துப் பொடியாக்கி காலை, மாலை அரை டீஸ்பூன் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இதைப் பனங்கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட சர்க்கரைநோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் போன்றவை சரியாகும்.
தவசி முருங்கை
தவசி முருங்கை இலைச் சாற்றைச் சாப்பிட்டால், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி, சிறிது உப்பு, மிளகு சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் வீதம் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.
திப்பிலி
திப்பிலியில் அதன் பூக்கள்தான் மருந்தாகப் பயன்படுகின்றன. இதை வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை சரியாகும். திப்பிலியைப் பொடியாக்கி 1:2 என்ற விகிதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கியை களிமண்ணுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வாத வீக்கம் நீங்கும். கீல் வாதத்துக்கும் இது நல்ல மருந்து. இதன் இலை, வேரைச் சம அளவு எடுத்து உலரவைத்து பொடியாக்கி 10 முதல் 15 கிராம் வரை பசும்பால் சேர்த்துச் சாப்பிட்டால் மூலம், சிறுநீர் நோய்கள் குணமாகும்.
நேத்திரப் பூண்டு
நேத்திரப் பூண்டு மூலிகையைப் பொடியாக நறுக்கி, செம்பு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நல்லெண்ணெய் ஊற்றி பத்து நாள்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டவும். இதில் 2, 3 சொட்டுகள் காலை, மாலை கண்களில் விட்டுவந்தால் 96 விதமான கண் நோய்கள் சரியாகும். மெட்ராஸ் ஐ நோயும்கூட குணமாகும்.
பவளமல்லி
பவளமல்லி இலைகள் ஐந்து எடுத்து, நீர்விட்டு அலசி சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். இதை வடிகட்டி, தினமும் இரண்டுவேளை குடித்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் சரியாகும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சளி, இருமல் கட்டுக்குள் வரும்.
லெமன்கிராஸ்
லெமன்கிராஸ் இலை இரண்டை எடுத்து மூன்று கிராம்பு, லவங்கப்பட்டை – மஞ்சள்தூள் சிறிது, பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டவும். இதைக் குடித்தால் காய்ச்சல், இருமல், சளி குணமாகும். இதன் இலையுடன் தேயிலை, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலவும் செய்து அருந்தலாம்.
ஊமத்தை
ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் போட்டால் கீல் வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் அரை லிட்டர் ஊமத்தை இலைச் சாறு சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி புண்கள், அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாகத் தடவினால் குணமாகும்.

மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால்தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம். உணவில் காரத்தை கூட்டவும், கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் கருப்பு மிளகு பயன்படுகிறது.
ஆனால், எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல மருத்துவ காரணங்களுக்காக நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர்.
1. மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மஞ்சளுடன் கலக்கும்போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும் அதிகரிக்கும்.
2. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். (மருந்து வீறு என்பது கடும் மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல் போன்றவையாகும்.)
3. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
4. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.
5. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.
6. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும். மிளகுத்தூள் 1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வர புழு வெட்டு நிற்கும்.
7. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.
8. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும். மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
செய்முறைகள்:
1. முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும். இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் ‘ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும். இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.
2. இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3, உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம். இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.
4. நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும். மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.
www.rumiherbals.online 
www.sigaramyoga.com
பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.
கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
அமுக்கரா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பொடி: சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பொடி: இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ரிதழ் தாமரை பொடி: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
ஜாதிக்காய் பொடி: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பொடி: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பொடி: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பொடி: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பொடி: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பொடி: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
வேப்பிலை பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பொடி: வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பொடி: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பொடி: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பொடி: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடி: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியா நங்கை பொடி: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பொடி: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
கோரைகிழங்கு பொடி: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பொடி: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பொடி: ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பொடி: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பொடி: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பொடி: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பொடி: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பொடி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பொடி: பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பொடி: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பொடி: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பொடி: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பொடி: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பொடி: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பொடி: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாழை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பொடி: கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.

வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையைப் போக்குகிறது.
இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.
சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது.
மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.
இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப் படுத்தும். தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.
இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவுகிறது.
தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.
இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது.
இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பயன்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.
அடிக்கடி இளநீர் பருகி நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க.
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.
தேவையான பொருட்கள்:
  • முழு நெல்லிக்காய் 10
  • வெற்றிலை 20
  • கொத்தமல்லி இலை
  • கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி
  • காய்ந்த மிளகாய்  – 4
  • பூண்டு 6 பல்
  • வால் மிளகு
  • சீரகம் தலா ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்

Aswa

  • Indicated for Improving General Health
  • Rich in all essential nutrients for growth
  • Continuous usage relieves stress and fatigue
  • Prevents degeneration of skeletal and muscular systems
  • Safe to consume on a daily basis with no contraindications
  • Available in 500 ml packing
  • Ingredients : Aswagandha, Raisins (Dry Grapes), Licorice (Athimadhuram), Nutmeg (Jadhikai Tuberosam), Cardamom (Elakkai), Kamal Orange, Sugar cane
  • Dosage : Dilute 1 part of juice in 7 parts of  water  and consume daily
  • Available in the form of Juice Concentrate
  • Technical Content : Anti-ageing, Immuno-modulator, Anti-Oxidant
  • Price : 500 ml : Rs.180
  • To get this product, Call : +91 044 4019 4570 (16 lines) / +91 96770 09443

  • Add-on therapy to OHA
  • Added advantage of controlling High Cholesterol
  • Controls side effects of diabetics
  • Reduces raise in blood sugar level
  • Controls excessive hunger and thirst in diabetic patients
  • Reduces fatigue and tiredness in diabetic patients
  • Available in 60 Count packing
  • Ingredients : Amla, Turmeric, Bitter Gourd, Siru-kurunja, Jambu/Naval, Methi seeds, Ponkoranti
  • Dosage : One or two capsules three times a day before food or after food or as directed by Physician
  • Available in the form of Capsules
  • Technical content: 
  • Anti-Diabetic
  • Anti-oxidant
  • Hyper Cholesteremic
  • Anti-hypogylcemic
  • Price : 60 Nos : Rs.175
  • To get this product, Call : +91 93842 22500

Having helped 2000 plus patients get better, with 20,000 plus consultations, over 600 health camps,  and 600 over awareness programs (mostly free) in the span of 15 years, we are proud pioneers in providing healthcare services in a holistic approach combining the various ancient, traditional systems of medicines and cures.



Products manufactured by Rumi Herbals are alternate replacement for some of the commonly used consumer products with Harmful chemical based food products and Junk foods which causes Health hazards. Rejuvenative herbs like “Kaya kalpa Herbs” are used in the formulations as a food or nutritional supplement in our day to day life along with our regular food to cleanse, strengthen and rejuvenate, our body organs.

for product Enquiry 
93842 22500

www.rumiherbals.online
rumiherbals@yahoo.com


மூங்கில் அரிசி

மூங்கில் ஒரு சுற்றுச்சூழல் நண்பன். ஒரு மூங்கில் மரமானது தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிட்டுக் காற்றைச் சத்தமாக்குகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும், மூங்கிலோ 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். மூங்கில் பூவுக்குள் அரிசி இருக்கும்.

மூங்கில் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
உடலை வலுவாக்கும்

மூங்கில் அரிசியையும், குருத்தையும் உணவாக உட்கொண்டால், சர்க்கரை நோயால் உருக்குலைந்த உடல் கூட உறுதி பெறும்

நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால், நீரழிவுநோய், புற்றுநோய், இதய நோய்கள், மலச்சிக்கல் எல்லாவற்றுக்கும் மூங்கில் அரிசி எதிரி
கொழுப்புச்சத்தைக் குறைக்கும். எனவே உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்

அல்சர் வராது

நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்

பொட்டாஷியம் நிறைந்து உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
சின்ன முத்து நோய் (Measles) வந்தவர்கள் மூங்கில் அரிசியில் சூப் செய்து அருந்தினால் விரைவில் நோயின் வீரியம் குறையும்


அன்பான நுகர்வோர்களே
     நமது இணையத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். எனது தொலைபேசி எண்ணிற்கு (93842 22500) அழைத்து உங்களின் ஆர்டரை உறுதி செய்து கொள்ளலாம்.

     இணைய தளம் வாயிலாக ஆர்டர் செய்பவர்களுக்கு நுகர்வோர் சலுகையாக MRP யிலிருந்து 10% ரூபாய் குறைவாக கிடைக்கும்.
     
         ரூமி ஹெர்பல்ஸ் பொருட்களின் விலைப்பட்டியல்
1.Arithirito Herbal Caps                                          60 Nos                        Rs .195
2.Asmono Herbal Caps                                             60 Nos                        Rs.140
3.Constino Herbal caps                                            60 Nos                       Rs.180
4.Diarun Herbal caps                                               60 Nos                      Rs.140

                                         ரூமி ஹெல்த் ஜூஸ்

1.Allovir Herbal juice                                                           5oo ml                        Rs.180
2.Amla Herbal Juice                                                            1000 ml                      Rs.230
3.Amla Herbal Juice                                                            500ml                         Rs.140
4.Amla Herbal Juice                                                            250 ml                         Rs.80
5.Ushba Herbal Juice                                                          1000 ml                      Rs.250
6. Ushba Herbal Juice                                                         500 ml                        Rs.160
7. Ushba Herbal Juice                                                         250 ml                         Rs.85
                                                ரூமி ஹெர்பல் சோப்

1.Allovir Herbal soap                                                            75 gm                        Rs.30
2.Azhi Sandal Herbal Soap                                                 75 gm                         Rs.30
3.Mathura Herbal Soap                                                       75 gm                         Rs.16
4.Meni Amla Soap                                                                75 gm                         Rs.22
5.Meni Amla Soap (Family Pack )                                         3*75 gm                     Rs.60

                                                            மூலிகை ஹெல்த் பவுடர்கள்

1.Glodent Herbal Tooth Powder                           100 gm                        Rs.70
2.Shikaki Herbal Powder                                        100 gm                        Rs.70
3. Shikaki Herbal Powder                                       5 gm                            Rs.3

                                    ஹெர்மாபோல்ட் மற்றும் ஹனிபேல் ஜாம்

1.Herbomalt Herbal Food                                       500 gm                       Rs.190
2. Herbomalt Herbal Food                                      100 gm                        Rs.50
3.Honeybeal Jam                                                      300 gm                       Rs.130

MRP + VPP Charges தனி

further Details Contact @ 93842 22500

Coimbatore.
Vishwa @ 93842 22500

A call-to-action text Contact us